திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (38 of 53)

காரையாற்றில் விஷத்தன்மை கொண்ட நீர்
 
2003ல் மே மாதம் இறுதியில் தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் படகு சவாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பின் படகு ஒட தயாரான போது எடுத்த படம்.
 
பொதிகை மலை தான் உலகத்திலேயே முதிர்ந்த மலை. இங்கு தான் முதல் முதலில் மனிதர்கள் தோன்றி உள்ளனர். இந்த பொருநை நதி தோன்றும் பொதிகை மலை தான் உலகம் அழியும் போது கடைசி அழியும் மலை.
 
ஏன் தெரியுமா? அகத்தியரின் வாழ்க்கை 4 யுகம். 18 நாட்கள். இதில் 4-வது யுகத்தில் தான் உலகம் அழியும். அதன் பிறகும் 18 நாட்களும் அகத்தியர் உயிரோடு இருப்பார். அப்படியென்றால் அகத்தியர் வாசம் செய்யும் பொதிகை மலை தானே கடைசியில் அழியும் மலை என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அவர்கள் சொல்லில் உண்மை இல்லாமல் இருக்குமா என்ன.
 
பெயர் காரணம்
 
பொதிகை மலைக்கு இந்தப் பெயர் வரக்காரணம் என்ன என்று ஆராயும் போது, பொதி என்ற சொல்லுக்கு பிணிப்பு. தொகுதி, மூளை, அரும்பு என்று பொருள்கள் இருக்கின்றன. இதில் தீப்பிழம்புகளாக சுழன்று கொண்டிருந்த பூமியில் பல அணுக்கள் ஒன்றாக பிணிந்து முதன் முதலில் வெப்பம் தணிந்து இறுகிய இடம் இதுதான். இதனால் தான் பொதிகை என பெயர் பெற்றது.
 
அதே போல் செடி கொடி முளைப்பதற்கும் உயிர்கள் அரும்புவதற்கும் தகுந்த முதல் இடம் இது தான் எனவே உலகில் முதல் முதலில் மரம் செடி கொடி வளர்ந்த இடமும் இதுதான். எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மலையில் இருந்துதான் தென்றல் தோன்றுகிறது. அதாவது இம்மலையில் சந்தன மரங்களில் படிந்து வீசும் தென்றல் காற்று மனித உடம்புக்கு நோய் தீர்க்கும் அருமருந்து. சிவபெருமானே கூத்தாடும் போது தென்றல் முதக்தில் வீச வேண்டி பொதிகை மலையை நோக்கி முகத்தை வைத்துதான் நடனமாடினாராம்.
ஆரம்மென்கால் திருமுகத்திடை வீச
மடுக்கவும் தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ
தென்திசை நோக்கிஅடுக்க வந்து உவந்து ஆடுவார்
என திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதி அடிகளார் எழுதியுள்ளார். இதை தான் திருவிளையாடல் திரைப்படத்தில் மதுரை மன்னன், பாடும் போது பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்று எழுதியுள்ளார் பாடலாசிரியர்.
 
பொதிகை மலையில் தேக்கு, வேங்கை, மா, முதலிய மரங்களெல்லாம் வானுயரமாக ஓங்கி வளம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மரம், பொதிகை மலைக்கு மேலே வரும் மேக கூட்டங்களை இழுத்து, உடனே மழை பொழிய செய்யும் என்கிறார்கள் ஆர்வலர்கள். இக்கூற்று உண்மை தான். ஜூன் மாதம் 2003-ம் ஆண்டு ‘நதிகரையோரத்து அற்புதங்கள்’ கட்டுரை குறித்து நான் தகவல் திரட்ட பொதிகை மலைக்கு சென்றபோது, அந்த உண்மையை கண்ணால் காண முடிந்தது.
 
எனது இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் வேகத்தில் மழை பெய்து கொண்டே மலையை விட்டு எனது வாகனத்தினை துறத்தி கொண்டே வந்தது. நான் வேகத்தினை குறைத்தால் மழை என்னை முந்தி போகும், நான் வேகத்தினை கூட்டினால் மழை எனக்கு பின்னால் போய் விடும். எனக்கு முன்னால் காய்ந்து கிடந்து தார்சாலை, இந்த மழையால் நனைவதை கண்டு ஆனந்தமாக நான் பயணித்தேன்.
 
ஆகவேதிடிர் மேககூட்டத்தினை இழுத்து மழையாக பொழிய வைக்க பொதிகை மலை மரத்திற்கு தன்மை உண்டு. அந்த நேரத்தில் மே மாதம் முழுவதும் தண்ணீர் குறைவாக மேலணையில் இருந்த காரணத்தால் பாணதீர்த்தத்திற்கு படகு ஓட்டம் இல்லை. நாங்கள் சென்ற அன்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அப்போது தான் அந்த அதிசயத்தை கண்டோம். என்னுடன் வந்தவர்கள் பாணதீர்த்தத்தில் நின்று கொண்டிருந்த போது மழை பெய்தது.
 
சிறிது நேரத்தில் அந்த தீர்த்தத்தில் வெள்ளம் கொட்டியது. திடீரென்று வரும் மேக கூட்டம் மரத்தின் அருகே வந்தவடன் மழையாக பெய்ய மறு நிமிடம் பாணதீர்த்தத்தில் தண்ணீர் கொட்டியது. அதே நேரம் கீழே விக்கிரமசிங்கபுரத்தில் இறங்கி பார்த்த போது அங்கு மழை இல்லை. ஆனால் மேலணையில் அன்று மட்டும் 2 அடி தண்ணீர் கூடி இருந்தது.
 
தண்பொருநை
 
ஏற்கெனவே தாமிரபரணிக்கு தண்பொருநை என்று ஒரு பெயர் உண்டு என்று கூறினோம். அந்த பெயா வரக் காரணம், தண் என்றால் குளிர்ச்சி.தண் பொருநை தான் பின்பு தாமிரபரணி என பிறமொழி அன்பர்களால் பேசப்பட்டு நிரந்தரமாக தாமிரபரணியாக மாறி இருக்க வேண்டும். குறிப்பாக தாமிரசத்து இந்த ஆற்றில் மிக அதிகமாக இருப்பதால் இப்பெயரே நிலைத்து இருக்க வேண்டும் என்றும் கூறப்படுவதாக ‘நெல்லை ஜில்லா கோவில்கள் வரலாறு’ புத்தக ஆசிரியர் கூறுகிறார்.
 
ஊட்டி
 
ஏழைகளின் ஊட்டி குற்றாலம் என்று கூறுகிறோம். ஊட்டி என்பது நீலகிரி மலையில் உள்ளது. அந்த ஊட்டிக்கு இன்னொரு பெயர் உதகமண்டலம். உதகமண்டலம் என ஊட்டிக்கு ஏன் பெயர் வந்தது என்று ஆராயும் போது நமக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. அதாவது நீலகிரி மலையில் உள்ள ஊட்டி முன்பு ஒத்தைக்கல் மந்து என்று அழைக்கப்பட்டுள்ளது. அது ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் உச்சரிப்பை சரியாக சொல்ல தெரியாமல் ஒட்டகமண்டு என்று மருவி அதுவே நாளடைவில் உதகமண்டலம் ஆயிற்று எனவும் கூறுகிறது.
 
தாமிரபரணி ஆற்றில் சேரும் காரையாற்றை நஞ்சு ஆறு என்று அழைக்கிறார்கள். காரையாற்றை நஞ்சு ஆறு என்கிறோமே. ஏன்..? காரையாற்றில் குளித்தால் அதில் உள்ள நீரை குடித்தால் கொடுமையான காய்ச்சல் வந்து துன்புறுவர். இதற்கெல்லாம் காரணம் அடர்த்தியான காரையாற்று தண்ணீர். இந்த தண்ணீரில் குளித்து அந்த தண்ணீர் மட்டும் ஒரு மனிதனின் உடம்புக்கு பிடித்துக் கொண்டால், அவன் உலகத்தில் உள்ள எந்த நதியிலும் எப்போதும் குளிக்கலாம்.
 
அவனது உடம்புக்கு ஒன்றுமே ஆகாது. திடிரன்று இந்த ஆற்றில் குளித்து காய்ச்சல் போன்ற நோய் வருவதால் இந்த காரையாற்றை நஞ்சு ஆறு என்று அழைக்கிறார்கள். அது மட்டுமல்ல, பொதிகை மலை குளிரை ஒரு மனிதன் தாங்கிக் கொண்டு விட்டால் அவன் இமயமலையில் உள்ள குளிரை எளிதில் தாங்கி விடுவான் ஏனென்றால் பொதிகை மலையின் சீதோஷண நிலை அப்படிப்பட்டது.
 
இங்கு உள்ள மூலிகை மணம் கலந்து வரும் தென்றல் சுவாசத்திலே சாப்பிடாமலேயே மனிதர்கள் வாழ முடியும். இங்குள்ள ஒரு மூலிகை இலையில் 4யை சாப்பிட்டால் மனிதனுக்கு தேவையான 2400 கலோரி சக்தி கிடைக்கும்.


Favorite tags



Tirunelveli Business Directory