» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய பட்ஜெட் எதிரொலி: விலை குறையும், கூடும் பொருட்களின் பட்டியல்!
சனி 1, பிப்ரவரி 2025 4:21:46 PM (IST)
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் எதிரொலியாக பல்வேறு பொருட்களுக்கான விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ஒரு மணி நேரம் 14 நிமிடம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல சிலவற்றிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்:
லித்தியம்-அயன் பேட்டரி, ஈயம், துத்தநாகம் மற்றும் 12 முக்கியமான தாதுக்களின் துண்டுகள்
37 க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய உள்ளது.
அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது.
*எல்.இ.டி,/எல்.சி.டி டிவிக்கள்
* பதப்படுத்தப்பட்ட மீன்கள்
*லெதர் ஷூக்கள், லெதர் ஜாக்கெட்டுகள்
*கடல் பொருட்கள்
விலை கூடும் பொருட்கள்
* ஸ்மார்ட் டிவிக்கள், போன்களுக்கான பேனல்கள் மீதான அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் வரி என்பது அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்புள்ளது