» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் தூக்குதண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தம்: நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 20, பிப்ரவரி 2025 10:03:07 PM (IST)

சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் தூக்குதண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி வாலிபர் பன்னீா் செல்வம் பரந்தாமன். இவர் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயி–னுடன் ஒருவா் பிடிபட்டால் மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி பன்னீர்செல்வத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

பன்னீா் செல்வத்துக்கு தெரியாமலேயே அவரிடம் ஹெராயின் கொடுத்து அனுப்பப்பட்டதால் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக போராட்–டங்கள் நடந்தன. ஆனால் பன்னீர்செல்வத்துக்கு இன்று தூக்கு தண்டனையை நிறை–வேற்ற சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா்.

இந்த நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் கிர்ஸ்டன் ஹெய்ன் என்பவர் பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க கோரி கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். போதைப் பொருள் வழக்குகளில் மரண தண்டனை விதிப்பதற்கு எதி ரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், பன்னீர் செல்வம் நேரடியாக குற்றச் செயலில் ஈடுபடாத–தாலும் தண்ட–னையை நிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, பன்னீர் செல்வத்தின் தண்டனையை நிறுத்திவைக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory