» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் வனவிலங்கு சரணாலயம் அருகே ரயில் மோதி விபத்து : 6 யானைகள் பலி

சனி 22, பிப்ரவரி 2025 10:56:10 AM (IST)



மத்திய இலங்கையின் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே யானைகள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதால் 6 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் இலங்கையின் மின்னேரிய-கல்லோயா வழித்தடத்தில் அதிவிரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹபரானா நகரில் உள்ள வன விலங்கு சரணாலயம் அருகே ரயில் சென்றபோது அந்த தண்டவாளத்தை சில யானைகள் கடக்க முயன்றன. அப்போது யானைகள் மீது ரயில் மோதியது.

இதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. படுகாயம் அடைந்த யானைகளை வனத்துறையினா் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் யானைகள் மோதியதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

இது நாடு கண்ட மிக மோசமான வனவிலங்கு விபத்து என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை துணை மந்திரி ஆண்டன் ஜெயக்கொடி கூறுகையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தண்டவாளம் அருகே யானைகள் செல்வதை தடுக்க மின் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory