» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் : வாடிகன் தகவல்

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:54:56 PM (IST)

போப் பிரான்சிஸ் உடல்நிலை மேலும் கவலைக் கிடமாக உள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்து உள்ளதால், ஜெமெல்லி மருத்துவமனை முன்பு பலர் குவிந்துள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு (88) திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற் பட்டதை தொடர்ந்து கடந்த 14-ந்தேதி இத்தாலி தலை நகர் ரோமில் உள்ள கெமேல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவ ருக்கு சுவாச குழாய் தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில் அவரது இரு நுரை யீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று வாடிகன் தேவாலயம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வாடிகன் வெளியிட்ட அறிக்கையில், போப் பிரான் சிஸ் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வரவில்லை. நேற்றைவிட அதிக வலி அவருக்கு இருந்தது. ஒரு நாற்காலியில் தனது நாளை கழித்தார்.

நீண்ட கால ஆஸ்துமா சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதிக ஆக்சிஜன் தேவைப் படும் நிலையில் இருந்தார். ரத்த சோகை நிலை கண்ட றியப்பட்டதை அடுத்து, அவ ருக்கு ரத்தமாற்றம் செய்யப் பட்டது என்று தெரிவித்து உள்ளது. மேலும் போப் பிரான்சி சுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறும் போது, போப் அபாய கட்டாயத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அதேவேளை யில் உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையில் இல்லை என்றனர்.

போப் பிரான்சிசின் உடல்நிலை மேலும் கவலைக் கிடமாக உள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்து உள்ளதால், அவர் நலம் பெற வேண்டி தேவாலயம் முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஜெமெல்லி மருத்துவமனை முன்பு பலர் குவிந்துள்ளனர். போப்பின் உடல்நிலை குறித்த அறிக்கை உலகெங்கி லும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory