» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போப் பிரான்சிஸ் நலம் பெற வேண்டி பிரார்த்தனை: வாடிகனில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 12:33:29 PM (IST)

போப் பிரான்சிஸ் உடல்நலம் பெற வேண்டி வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
88 வயதாகும் போப் பிரான்சிஸ், நிமோனியா பாதித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு 11 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மாலை முதல் வாடிகன் சதுக்கத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மிகவும் குளிரான மற்றும் மழை கொட்டும் இரவையும் பொருட்படுத்தாமல், போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இருப்பினும், நினைவுச்சின்ன சதுக்கத்தில் கூடியிருந்த மக்களின் மனநிலை பெரும்பாலும் சோகமாகவே இருந்தது. அங்குக் கூடியிருந்த சுமார் 4,000 பேரில் பலர் பிரான்சிஸின் இறுதி நாள்களாக இது இருக்கக் கூடும் என்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கையில் மோடி வருகையை முன்னிட்டு தெரு நாய்களைப் பிடிக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:31:33 PM (IST)

இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34% பரஸ்பர வரி விதிப்பு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:12:06 PM (IST)

அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
புதன் 2, ஏப்ரல் 2025 12:18:53 PM (IST)

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறி தீ விபத்து : 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:30:26 AM (IST)

துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)

அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)
