» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம்: வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்கள் 90% குறைப்பு
வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:54:34 AM (IST)
அமெரிக்காவில் யுஎஸ்எய்டு வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காகப் பல மில்லியன் டாலரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா ஒதுக்குகிறது. கடந்த 2023ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ.5.17 லட்சம் கோடி(60 பில்லியன் டாலர்) ஒதுக்கியது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் யுஎஸ்எய்டு நிதியை முடக்கினார். இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உலகெங்கும் பல பல நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து யுஎஸ் எய்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 பேரை வேலையை விட்டு நீக்குவதற்கு எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் நிர்வாக திறன் துறை உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்தியுள்ள டிரம்ப் நிர்வாகம் இப்போது ஒரு பெரிய நடவடிக்கையாக,யுஎஸ் எய்டு நிறுவனத்தின் வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90% க்கும் அதிகமானவற்றைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தடை
அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக லாப நோக்கம் அல்லாத அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அமீர் அலி, வெளிநாட்டு நிதியுதவியை ஒப்பந்ததாரர்களுக்கும்,மானியம் பெறுபவர்களுக்கும் வழங்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மாவட்ட நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கையில் மோடி வருகையை முன்னிட்டு தெரு நாய்களைப் பிடிக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:31:33 PM (IST)

இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34% பரஸ்பர வரி விதிப்பு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:12:06 PM (IST)

அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
புதன் 2, ஏப்ரல் 2025 12:18:53 PM (IST)

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறி தீ விபத்து : 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:30:26 AM (IST)

துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)

அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)
