» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் இந்தியா முன்னணி : ஐ.நா. அறிக்கை

சனி 15, மார்ச் 2025 5:06:50 PM (IST)

2024ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்த நாடுகள் வர்த்தகத்தில் சுருக்கம் கண்ட நிலையில், சராசரி வர்த்தக விரிவாக்கத்திற்கும் கூடுதலாக வளர்ந்து வரும் நாடுகளான, குறிப்பிடும்படியாக சீனா மற்றும் இந்தியா முன்னணியில் உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு, மார்ச் தொடக்கம் வரையிலான தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டு உள்ள செய்தியில், உலகளாவிய வர்த்தகம் 2024-ம் ஆண்டில் 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விரிவாக்கம் கண்டுள்ளது. இது ஒட்டுமொத்தத்தில் 33 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் முடிவில், சேவை வர்த்தகம் 9 சதவீதம் அளவுக்கும், சரக்கு வர்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் வளர்ச்சி அடைந்து உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. 

இதனால், சேவை மற்றும் சரக்கு சார்ந்த வர்த்தகம் உலக அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில், வர்த்தகத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒரு முக்கிய நாடாக அமெரிக்கா இருந்தபோதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வலுவான வர்த்தக செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளின் வர்த்தகம், அதிலும் ஏற்றுமதியில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ள தென்கொரியா ஏற்றுமதி வளர்ச்சியில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளர்ச்சி தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளபோதிலும், ஏற்றுமதி வளர்ச்சி எதிர்மறையான நிலையில் உள்ளது. ஜப்பான், ரஷியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசங்களில் காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் இறக்குமதி வளர்ச்சி ஆனது எதிர்மறையான நிலையிலேயே உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory