» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 30, ஜூலை 2024 10:55:14 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று காலையில் தொடங்கியது. இதையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
காலை 6 மணிக்கு கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. 6.30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பெண்கள் குலவையிட்டனர். பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.
4-ம் திருநாளான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. அம்பாள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைகிறார்.
10-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் படைக்கப்படும்.
அலங்கார தீபாராதனையை தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)


