» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக இயல் வல்லுநர் பணியிடத்திற்குத் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சிறை கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.15,000/- தொகுப்பூதியம் (Honorarium Pay) வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதியாகக் கீழ்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று பெற்றிருக்க வேண்டும்:
சமூகப் பணி (Social Work), சமூக சேவை (Social Service), சமூக அறிவியல் (Social Science), குற்றவியல் (Criminology), சமூகவியல் (Sociology), வயதுவந்தோர் கல்விக்கான கற்பித்தல் (Andragogy / Adult Education) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் (PG Degree).
(அல்லது)
சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளகலைப் பட்டம் (UG Degree). (அல்லது) ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்று, அதனுடன் சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகியவற்றில் டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளைக் கொண்ட நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)


