» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு தமிழக அரசு பாராட்டுச் சான்று!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 4:22:20 PM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசு பாராட்டுச் சான்று வழங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 2023-2024 ம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியடைய அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். இவ்விழாவில் 2023-2024ம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) தேவிகா ராணியிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சகாய புஷ்பராணி பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆக்ஸ்போர்டு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory