» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உயர்வுக்கு படி: 33 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான சேர்க்கை ஆணை வழங்கல்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 5:56:00 PM (IST)



நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியின் மூலம் 3 நரிக்குறவ மாணவர்கள் உட்பட 33 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான சேர்க்கை ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில், இன்று (20.09.2024) நடைபெற்ற நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள்.

2021-2022, 2022-2023, 2023-2024 ஆம் ஆண்டுகளில் பன்னிரென்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கும், கல்லூரியில் இடைநின்ற மாணவர்கள் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக உயர்வுக்கு படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு அதன்படி, முதற்கட்டம் இன்று அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, மானூர், திருநெல்வேலி நகர், பாளையங்கோட்டை நகர் மற்றும் பாளையங்கோட்டை புறநகர் ஆகிய 7 கல்வி ஓன்றியங்களுக்கு 12.09.2024 அன்று மேலத்திடியூர் பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக இன்று இராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு ஆகிய நான்கு கல்வி ஒன்றியங்களுக்கு நடைபெற்றது.
கலந்து கொண்ட மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடகங்களை தேர்வு செய்து பயிலுவதற்கு ஏதுவாக 16க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர்க்கல்வி வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், கலை மற்றும் அறிவியல், திறன் பயிற்சிகள் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கும், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல், விடுதிக்கு விண்ணப்பித்தல், கல்விக்கடன், கல்லூரியில் சேர்கைக்கு தேவையான சான்றிதழ்கள், தொழில் வழிகாட்டுதல், உயர்க்கல்வி வழிகாட்டுதல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இடைநின்ற மாணவர்கள் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக உயர்வுக்கு படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் எதனால் உயர்க்கல்வி படிக்க முடியவில்லை அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை மாணவர்களிடம் கேட்டறிந்து படிக்க விரும்பும் பாடத்தினை தெரிந்து கொண்டு அவர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில்; என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை வழங்குவதற்காக இம்முகாம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஐ.டி.ஐ பயிலுவதற்கு 3 நரிக்குறவ மாணவர்கள்; உட்பட 13 மாணவர்களும், பாலிடெக்னிக் பயலுவதற்கு 9 மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயலுவதற்கு 06 மாணவர்களும், பொறியியல் கல்லூரியில் பயலுவதற்கு 01 மாணவியும், என மொத்தம் 29 மாணவர்களுக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வளர்த்து சுய தொழில் தொடங்க 04 மாணவர்களுக்கு பயிற்சி என மொத்தம் 33 மாணவர்களுக்கு உயர்க்கல்வி பயிலுவதற்கான சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.செண்ப விநாயக மூர்த்தி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் , திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் உதவி இயக்குநர் ஜார்ஜ் பிராங்கிளின் , மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory