» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவில் புதிய தேருக்கு 100 கிலோ வெள்ளி: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!

ஞாயிறு 29, செப்டம்பர் 2024 9:23:22 AM (IST)



நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்வதற்காக 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

நெல்லை, நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்யப்பட இருக்கிறது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்தது.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை, நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித்தேர் 1991-ம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து விட்டது. சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி ஆகியோர் 100 கிலோ வெள்ளிக்கட்டியை வழங்கியுள்ளனர்.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் ஆகும். அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் 68 தங்கத்தேர்களும், 55 வெள்ளித்தேர்களும் உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின் ரூ.29 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும், ரூ.27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1,000 கோடிக்கு மேல் உபயதாரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். மருதமலை முருகன் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் வாகனங்கள் அதிகளவில் வருவதால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இ-பாஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

பருவமழை காலங்களில் கோவில்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால்கள் மூலம் தெப்பக்குளங்கள் முழுமையாக நீர் நிரம்பும் வகையில் அவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கோவில் செயல் அலுவலர்கள், மண்டல இணை ஆணையர்கள் தொடர்ந்து கண்காணித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், வெள்ளி நன்கொடையாளர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory