» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 2பேர் பலி
வெள்ளி 25, அக்டோபர் 2024 12:53:59 PM (IST)
நெல்லை அருகே மூன்றடைப்பில் அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழந்தனர்.
நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்றடைப்பு அருகே அரசு பஸ்சும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாங்குநேரி அருகே உள்ள படலையார் குளம் ஜே ஜே நகரைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ் (20), முதலைக்குளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) ஆகிய 2பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
