» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் அணுக்கழிவுகளால் தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் : சபாநாயகர் அப்பாவு பேச்சு

சனி 26, அக்டோபர் 2024 10:35:19 AM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகள் தென் தமிழக பகுதிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 


நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது "தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் தாது மணவில் கதிர்வீச்சு இருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகள் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஏற்கனவே கூடங்குளத்தில் செயல்பாட்டில் இருக்கும் 1 மற்றும் 2-ம் அலகுகளில் கழிவுகள் நிறைந்துவிட்டன. அவற்றை என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த அச்சுறுத்தல் தென் தமிழக பகுதிக்கு இருக்க கூடாது. ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பகுதிகளுக்கு அதை கொண்டு சென்றால், இந்த பகுதி மக்கள் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

TamilanOct 26, 2024 - 11:41:47 AM | Posted IP 162.1*****

Sir ivvalavunaal enga iruntheenga?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

திங்கள் 30, டிசம்பர் 2024 4:59:25 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory