» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக்க நடவடிக்கை: நெல்லை எம்.பி.யிடம் அறிக்கை ஒப்படைப்பு

வியாழன் 2, ஜனவரி 2025 8:23:55 PM (IST)



தாமிரபரணியை சீர்செய்ய நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் தாமிரபரணி ஆர்வலர்கள் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸிடம் கொடுத்தனர்.

தாமிரபரணியை சுத்தப்படுத்தி சாக்கடை கலக்காத நதியாக மாற்றவேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு நேரடியாக விசிட் செய்து நதியை காப்பாற்ற பல்வேறு உத்தரவுகள் பிரபித்து நடவடிக்கை எடுத்தனர். 

இதற்கிடையில் நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அரசின் மூலம் நதியை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகிறார். தாமிரபரணி ஆர்வலர்களிடம் இதற்கான விரிவான அறிக்கையை கேட்டு வருகிறார். இந்த நிலையில் நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் வீரபுத்திரன், கூடல் அரசன் கொண்ட குழுவினர் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். 

இந்த அறிக்கையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கர் சுவர் போல தாமிரபரணியின் இருகரையில் 60 கிலோ மீட்டருக்கு சுவர் அமைத்தும், சாக்கடை இல்லா நதியாக மாற்ற எகிப்தில் உள்ளது போன்ற சாக்கடை சுத்தகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயார் செய்தார்கள். இந்த அறிக்கையை நெல்லை எம்.பி ராபர்ட் புருஸ் அவர்களிடம் நம் தாமிரபரணி சட்ட ஆலோசகர் சுடலைமணி வழங்கினர். 

அவருடன் தாமிரபரணி ஆர்வலர்கள் கூடல் அரசன், வீரபுத்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியை பிரேமலதா, தமிழ் சான்றோர் பேரரவை மற்றும ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதர்சன், வழக்கறிஞர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

நாளை 3ந் தேதி மதுரை உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜர் ஆக உள்ளார். அவர் தாமிரபரணியை சுத்தப்படுத்துவதற்கான விரிவான அறிக்கை ஒன்றை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

திங்கள் 30, டிசம்பர் 2024 4:59:25 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory