» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றினால் புகார் தெரிவிக்கலாம் : ஆட்சியர் தகவல்!

வியாழன் 2, ஜனவரி 2025 4:59:37 PM (IST)

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றினால் புகார் தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதிமன்ற வழக்கு எண்.WP(CIVIL) 324/2020)-ல் 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி, மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய வருகிறது.

ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு எண்-11 ன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) அவர்களுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

திங்கள் 30, டிசம்பர் 2024 4:59:25 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory