» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

வெள்ளி 1, நவம்பர் 2024 12:07:03 PM (IST)

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முன்னதாக சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பணிகள் குளிக்க கடந்த 27ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory