» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கணவர் தாக்கியதில் ‘பல்செட்’ தொண்டையில் சிக்கி பெண் சாவு

சனி 2, நவம்பர் 2024 8:55:13 AM (IST)

வாசுதேவநல்லூர் அருகே கணவர் தாக்கியதில் ‘பல்செட்’ தொண்டையில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவர் தன்னுடைய மாமா மகளான சசிகலாவை (34) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி சசிகலாவின் தாயாரான வால்பாறை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பார்வதி, தனது மகளைப் பார்ப்பதற்காக வந்தார்.

மதியம் திருமலைச்சாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திருமலைச்சாமி, பாத்திரம் கழுவ அமரும் சிறிய மரப்பலகையை எடுத்து மனைவி சசிகலாவின் முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சசிகலாவின் வாயில் பொருத்தப்பட்டு இருந்த ‘பல்செட்’ கழன்று அவரது தொண்டையில் சிக்கியது. இதில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சசிகலா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பார்வதி அளித்த புகாரின்பேரில், திருமலைச்சாமி மீது பி.என்.எஸ். 105 (மரணம் ஏற்படுத்தும் எண்ணம் இல்லாமல் உடலில் காயம் ஏற்படுத்துதல்) பிரிவில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வாசுதேவநல்லூர் அருகே கணவர் தாக்கியதில் ‘பல்செட்’ கழன்று தொண்டையில் சிக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory