» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!

வெள்ளி 17, ஜனவரி 2025 11:18:36 AM (IST)



நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா, கடந்த சில வருடங்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.

1976 ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory