» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு : பயணிகள் வரவேற்பு!

புதன் 15, ஜனவரி 2025 9:05:22 PM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் முதல்முதலாக 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இன்று(ஜன. 15) அதிகாலை மணிக்கு 6.05 புறப்பட்டது. அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டது.


மக்கள் கருத்து

UNMAIJan 16, 2025 - 01:06:28 PM | Posted IP 162.1*****

BJP SERVICE TOWARDS PEOPLE......GREAT

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory