» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்: அரசுக்கு முக்கிய கோரிக்கை!!!

வியாழன் 16, ஜனவரி 2025 5:55:55 PM (IST)



காணும் பொங்கலை முன்னிட்டு அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள், சாலை வசதி மற்றும் உடை மாற்றும் அறையை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அடுத்தடுத்து மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் என தமிழகத்தில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர் குறிப்பாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது காணும் பொங்கல் என்றாலே தமிழகத்தில் பாரம்பரியமாக பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று நீராடி விட்டு பொழுதை போக்குவார்கள் அந்த வகையில் 

காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மட்டும் இல்லாமல் விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அகஸ்தியர் அருவியில் குவிந்தனர்.

இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இன்றும் அருவியில் மிதமான தண்ணீர் விழுந்தது. பாபநாசம் பகுதியில் இன்று மேகமூட்டத்துடன் லேசான மழை சாரல் விழுவதால் வானிலை இதமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ரம்மியமான இயற்கை சூழலை ரசித்தபடி அருவியில் குறித்து விட்டு சென்றனர். 

மேலும் அருகில் உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அங்கு சென்ற பொதுமக்களும் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க வந்தனர். இதனால் கூட்டம் அதிகளவு காணப்பட்டது முன்னதாக பாபநாசம் வனசோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது. 

வன சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனையிட்டனர். இதற்கிடையில் அருவிக்கு செல்லும் சாலை மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்கவும், அருவிக்கு அருகில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory