» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பில் கபடி போட்டி!

வியாழன் 16, ஜனவரி 2025 12:11:22 PM (IST)



தென்காசி மாவட்டம் மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பாக 43ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. 

கபடிபோட்டியை தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் பி.ரவி தலைமையில மாநில துணை தலைவர் ஆர் எஸ் ஆர்மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், மாநில பொருளாளர் அருண்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.  போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெத்துராஜ், செயலாளர் ராஜகோபால், விளாத்திகுளம் வசந்த் ஜெயக்குமார், விளாத்திகுளம் சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்கள் சங்கர் செந்தில், மனோகர், விழாக்குழு தலைவர் முருகன், செயலாளர் பழனிவேல் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory