» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தெற்கு பாப்பான்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் : டிச.31ல் பொதுமக்கள் மனு அளிக்க ஏற்பாடு
சனி 28, டிசம்பர் 2024 5:44:18 PM (IST)
தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு வருகிற 31ஆம் தேதி கிராம நிருவாக அலுவலகம் அருகில் மனுக்கள் பெறப்படவுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாம் 23.01.2025 அன்று நடைபெற உள்ளது.
எனவே, அதற்கு முன்னோடியாக 31.12.2024 அன்று தெற்கு பாப்பான்குளம் கிராம நிருவாக அலுவலகம் அருகில் வைத்து காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. மேற்படி முகாமில் சார் ஆட்சியர், சேரன்மகாதேவி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.
முகாம் நிறைவுற்றவுடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மேற்படி ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.