» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:20:01 AM (IST)
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன் காந்திமதிநாதன், என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை 40 கிலோ மீட்டர் சாலையானது, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி துறைமுகம், உப்பளங்கள் உள்பட பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் சென்ற பின்னர், இந்த சாலையில் எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில் இந்த பகுதியிலேயே உள்ளது. நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் வெளி மாநிலபக்தர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் குண்டும், குழியுமாக மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த சாலையை முறையாக சீரமைக்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரையிலான 40 கி.மீட்டர் தூர இருவழிச்சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
Muthusamy s.Feb 19, 2025 - 08:22:13 AM | Posted IP 162.1*****
Very very worst road
Take action immediately
SubbiahFeb 19, 2025 - 07:34:25 AM | Posted IP 162.1*****
Welcome.most important for transport to all vehicles move to road.but the road not good so vehicles suffering slow moving.due to heavy traffic all' time government take action to immediately
SeenivasagamFeb 18, 2025 - 11:00:01 PM | Posted IP 162.1*****
வழக்கு தொடர்ந்தவர்க்கு பணம் கொடுத்து முடித்து விடுவார்கள்
சக்தி நவீன்Feb 18, 2025 - 09:45:54 PM | Posted IP 162.1*****
முக்காணி வட ஆத்தூர் தெற்கு ஆத்தூர் ஆத்தூர் ரோடு ரொம்ப மோசமா மோசமா இருக்கு
ராஜாராம்Feb 18, 2025 - 11:19:21 AM | Posted IP 172.7*****
கனி அக்கா தலைமையில் ஹேப்பி தெரு கொண்டாடுவோமா
ஆம்Feb 18, 2025 - 09:52:15 AM | Posted IP 172.7*****
இப்போ இருக்கும் அடிஅக்டி சொகுசு காரில் செல்லும் அரசியல்வாதிகளுக்கு அறிவு இல்லை
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

அந்தோணிசாமிFeb 20, 2025 - 03:20:50 PM | Posted IP 162.1*****