» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் (PHH, AAY) அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட தெரிவிக்கப்படுகிறது. 

 வெளியூரில் / வெளிமாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் நபர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று  தங்கள் விரல் ரேகைகளை பதிவுசெய்யது கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பொது நலக் கருதி உங்களில் ஒருவன்Feb 18, 2025 - 09:03:14 PM | Posted IP 162.1*****

இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்று திறனாளிகள், மற்றும் என்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள், இவர்களுக்கு வீட்டில் வந்து கை ரேகை பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும், இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுத்தாள் நன்றாக இருக்கும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றிFeb 18, 2025 - 04:12:31 PM | Posted IP 162.1*****

எதுக்காம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory