» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

2025 - 2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் : எம்பவர் இந்தியா கோரிக்கை!!இது தொடர்பாக மூத்த பெருமக்கள் நல இயக்கம் நிறுவனர் & முதன்மை தன்னார்வலர் ஆ.சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 11.2 சதவீதம் உள்ளனர். 

இது 2030 ம் ஆண்டில் 1.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூத்த பெருமக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் முதலீடுகள் தேவைப்படுகின்றது. ஆகவே மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 ல் வரையறை செய்துள்ள மூத்த பெருமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான உடல்நலம், வருமானம், உறைவிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு 2025-2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 59, நாள் : 04.09.2023 ன் படி செயல் திட்டங்கள் வகுத்து முதியோருக்கான மாநில கொள்கையை மிக விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

Nanjil N Selvam,kadayal.kanyakumari Dist.Feb 19, 2025 - 02:17:08 PM | Posted IP 172.7*****

முதியவர்கள் இந்த தேசத்தின் சொத்து.அவர்களை அருமையாக பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.முதியவர்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory