» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதல்வர் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

புதன் 19, பிப்ரவரி 2025 12:27:35 PM (IST)



குமரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில்; நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார்விளை, கிருஷ்ணன்கோவில், வெள்ளிகோடு ஆகிய முதல்வர் மருந்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். 

இத்திட்டத்தின் கீழ் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் நேர்வில் தொழில் முனைவோர்கள் மருந்தாளுநர்களுக்கு ரூ.3 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு மானியத்தொகையாக ரூ.2 இலட்சம் வழங்கப்படுகிறது. அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட தேரேக்கால் புதூர் ஊராட்சி சடையன்குளம், வடசேரி கிருஷ்ணன் கோயில், கோட்டார் இளங்கடை, தேரடி வீதி வடசேரி, வாத்தியார் விளை கிருஷ்ணன் கோயில், வடசேரி பஸ் நிலையம், பள்ளிவிளை ரோடு வெட்டூர்ணிமடம் ஆகிய ஏழு இடங்களிலும் தோவாளை வட்டாரத்திற்குட்பட்ட வெள்ளமடம், பாலமோர் ரோடு திட்டுவிளை, ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கடன் சங்கம், வீரமார்த்தாண்டன் புதூர் ஆகிய நான்கு இடங்களிலும்,

இராஜாக்கமங்கலம் வட்டாராத்துக்குட்பட்ட முகிலன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மேலச்சங்கரன்குழி, இராஜாக்கமங்கலம் சாலை புன்னை நகர், தெங்கம்புதூர் நாகர்கோவில், அரிய பெருமாள்விளை புத்தளம் ஆகிய ஆறு இடங்களிலும், குருந்தன்கோடு வட்டாரத்திற்குட்பட்ட மெயின் ரோடு வீராணி, தருவை மணவாளக்குறிச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் தக்கலை வட்டாரத்துக்குட்பட்ட வெள்ளிகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், முட்டைக்காடு குமாரபுரம் ஆகிய மூன்று இடங்களிலும்

திருவட்டார் வட்டாரத்திற்குட்பட்ட மங்கத்துகடை குமரன் குடி, சுவாமியார் மடம் ஜங்ஷன், திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய மூன்று இடங்களிலும் கிள்ளியூர் வட்டாரத்திற்குட்பட்ட பம்பம் மார்த்தாண்டத்திலும், முஞ்சிறை வட்டாரத்திற்குட்பட்ட மார்க்கெட் ரோடு மார்த்தாண்டம், குழிஞ்ஞான் விலை முன்சிறை, களியக்காவிளை டெலிபோன் நிலையம் ஆகிய மூன்று இடங்களிலும் மேல்புறம் வட்டாரத்திற்குட்பட்ட திரித்துவ குழித்துறை, மேல்புறம் பாகோடு, பளுகல் கண்ணுமாமூடு, புளிமூடு ஜங்ஷன் மேல்பாலை, வெட்டுவெந்தி மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளி அருகில், மார்த்தாண்டம், மாஞ்சாலும் மூடு ஆகிய ஏழு இடங்கள் என மொத்தம் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் வாத்தியார் விளை, தக்கலை வட்டாரத்துக்குட்பட்ட வெள்ளிகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளின் நிலைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை தனித்தனியாக அடையாளம் காணும் விதமாக வைப்பதோடு, பொதுமக்களுக்கு தட்டுபாடு இன்றி மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருந்து பொருட்களின் இருப்புகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவினை முன்னிட்டு மாவட்டத்திற்குட்பட்ட 36 முதல்வர் மருந்தகத்திற்கும் தேவையான மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வழங்கியது குறித்து உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வில் சரக துணைப்பதிவாளர்கள் முருகேசன் (நாகர்கோவில்), பொன் செல்வி (தக்கலை), கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் பிரித்திவி ராஜ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory