» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி கல்லூரியில் மாணவர் நீக்கப்பட்ட‌ விவகாரம் : 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்!

புதன் 19, பிப்ரவரி 2025 12:38:01 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் நீக்கத்தைக் கண்டித்து இன்று 2வது நாளாக கல்லூரி முன்பு மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை கண்டித்து கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு மாணவர் சங்க நிர்வாகி நேசமணியை ஒழுங்கு நடவடிக்கை விசாரணை கமிஷன் என்ற பெயரில் கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவங்கினர். 

இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சைலேஷ் அருள்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார் மாடசாமி உள்ளிட்டு பல மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

தமிழக அரசும் உயர்நிலைத் துறையும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் தொடர்பாக உடனடியான ஒரு விசாரணை கமிட்டியை உருவாக்கி கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாணவர் நேசமணி நிரந்தர நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். கல்வி கட்டண கொள்ளை மூலம் லாபம் சம்பாதிக்கும் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 


மக்கள் கருத்து

PrakashFeb 19, 2025 - 12:47:11 PM | Posted IP 172.7*****

Fees problem

PrakashFeb 19, 2025 - 12:47:11 PM | Posted IP 162.1*****

Fees problem

PrakashFeb 19, 2025 - 12:47:11 PM | Posted IP 172.7*****

Fees problem

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory