» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

புதன் 19, பிப்ரவரி 2025 12:47:17 PM (IST)



"தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்" என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து காெண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகரத்தில் இதுவரை நடத்தப்பட்ட குறைதீர்க்கும் முகாம்களில் 1634 மனுக்கள் பெறப்பட்டது. இதில் கிழக்கு மண்டலத்தில் 439 மனுக்கள் பெறப்பட்டு 400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளில் 2500 ரோடுகள் போடப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி கிழக்கு மண்டலங்களில் பூங்காக்கள் குறைவாக உள்ளது இதனால் சிறிய சிறிய இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தான் பூங்காக்கள் அதிகளவில் அமைக்கப்படுகிறது. இதில் 206 பூங்காக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது. 16, 11, 18, 2, 3, 11 ஆகிய வார்டுகளில் அதிக அளவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்துவிளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கு பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 6,300 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. சாலை ஓரங்களில் உணவு கடை வைத்திருப்பவர்கள் தரமான உணவுகள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். இல்லை என்றால் சுகாதார அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது கடை உரிமம் ரத்து செய்யப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
 
முகாமில் 33 மனுக்கள் பெறப்பட்டு 7 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.  நிகழ்ச்சியில் மாநகர துணை பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல ஆணையர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், மும்தாஜ், எடின்டா, ராமு அம்மாள், பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, ஜான்சி ராணி, மரிய கீதா, மேயரின் நேர்முக உதவியாளர்கள் பிரபாகரன், கேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

mari muthuFeb 19, 2025 - 02:03:00 PM | Posted IP 162.1*****

pls extend city roads.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory