» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரூ.52.57 கோடி மதிப்பில் வங்கி கடன், நலத்திட்ட உதவிகள்: சபாநாயகர் வழங்கினார்!
சனி 8, மார்ச் 2025 4:36:16 PM (IST)

திருநெல்வேலியில் மகளிர் தினத்தை முன்னிட்டு 771 பயனாளிகளுக்கு ரூ.52.57 கோடி மதிப்பில் வங்கி கடன் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் மகளிர் தின விழாவினை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் 771 பயனாளிகளுக்கு ரூ.52.57 கோடி மதிப்பில் வங்கி கடன் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது 18 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், "மகளிரை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஆகும். ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மிகவும் ஏழை, ஏழை, நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் ஆகியவர்களை கொண்டு சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ஊரகப் பகுதிகளில் 5779 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 4598 குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு நிதி மேலாண்மை, பொருளாதாரம் முன்னேற்றம் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வழங்கப்பட்ட பின் ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15000/- சுழல் நிதியும், நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10000சுழல் நிதியும் வழங்கப்படுகிறது.
பயிற்சி முடித்து சுழல் நிதி பெறப்பட்ட குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு ரூ.50000 முதல் ரூ.2000000 லட்சம் வரை அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊராட்சி அளவில் ஒன்றிணைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்படுகிறது. இந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு வங்கி பெருங்கடனாக 30 லட்சம் முதல் 2.00 கோடி வரை வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டிற்கு (2024-25) திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.727.00 கோடி வங்கி கடன் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு நாளது தேதி வரை 8523 குழுக்களுக்கு ரூ.590.50 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 492 ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.50.07 கோடி வங்கி கடனுதவியும் வழங்கப்பட்டது. சுழல் நிதியாக 37 குழுக்களுக்கு ரூ.5.55 இலட்சமும், வட்டார வணிக வள மையக் கடனாக 10 குழுக்களிலுள்ள 10 உறுப்பினர்களுக்கு ரூ.5.00 இலட்சமும், ஒருங்கிணைந்த பண்ணைத் தொகுப்பின் கீழ் 4 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.2.00 இலட்சமும், பெண் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 9 பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.8.00 இலட்சமும், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி நிதியின் கீழ் 139 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.139.00 இலட்சமும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக 14 சுய உதவிக்குழுக்களுக்கு இணை மானியமாக ரூ.46.00 இலட்சமும், நுண்தொழில் நிறுவன நிதி கடனாக 66 உறுப்பினர்களுக்கு ரூ.45.00 இலட்சம் என மொத்தம் 771 பயனாளிகளுக்கு ரு.52.57 கோடி மதிப்பில் கடன் உதவிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், 18 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருதுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் இலக்குவன், துணை ஆட்சியர் பயிற்சி செபி, முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பிசி.ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் மன்சூர், மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், கனகராஜ், முக்கிய பிரமுகர்கள் ஜோசப் பெல்சி, பரமசிவன் ஐயப்பன், சித்திக், மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)

போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)
