» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

வெள்ளி 14, மார்ச் 2025 9:26:13 PM (IST)



வல்லநாடு துளசி கல்விக் குழுமம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பில் போதையில்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது. 

இந்த பேரணியை எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் துவக்கி வைத்தார். துளசி கல்விக் குழுமத்தின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் அறிவழகன் முன்னிலை வகித்தார். பேரணியானது திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியிலிருந்து தொடங்கி சமாதானபுரத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பேராசிரியை வள்ளித்தாய் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.     


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory