» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)

திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான ஆறுமுகபாண்டி மகன் கணேஷ்முத்துகுமார் (37), நடராஜன் மகன் முருகபெருமாள் (27), மதியழகன் மகன் ரமேஷ் (வயது 24), கோவிந்தசாமி மகன் சக்திவேல் (28), லூர்து அற்புதராஜ் மகன் அலெக்ஸ்சற்குணம் (27) மற்றும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவி சுப்பையா மகன் முத்துகுமார் (26) ஆகிய 6 நபர்கள் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

எனவே இந்த 6 பேர் மீதும் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) ஆவுடையப்பன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று (23.03.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory