» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு கத்திக்குத்து: தந்தை கைது!

சனி 5, ஏப்ரல் 2025 8:24:32 AM (IST)

நெல்லை அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை கத்தியால் குத்திய மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை நேற்று முன்தினம் இரவில் கணேசனிடம் தட்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் கத்தியால் கணேசனை குத்தினார். இதில் காயமடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், பூசாரி கணேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory