» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி வெள்ளிவிழா: நிறுவனர் கிளிட்டஸ்பாபு பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 11:11:16 AM (IST)

நெல்லை எப். எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.
நெல்லை வண்ணார்பேட்டை எப். எக்ஸ் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடைபெற்ற 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு, துணைத்தலைவர் அமலி கிளிட்டஸ்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். மேலாண்மை இயக்குநர் அருண்பாபு, தாளாளர் அகஸ்டி பிரியதர்ஷினி அருண் பாபு ஆகியோர் கவுரவவிருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ்பாபு தலைமை உரையாற்றிய போது பேசியதாவது: மாணவர்கள் ஒத்துழைப்புடன் நமது கல்லூரி தேசிய அளவில் பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளை பெற்றுள்ளது. கல்லூரி மாணவர்கள் தமிழக அரசின் ஸ்டார்ட் அப், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிக ளில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை பெற்றுள்ளனர். மாணவர்கள் திறமையுடன் கூடிய கல்வி பயின்று. பெரிய நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பினை பெறவேண்டும். இதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து கல்லூரி முதல்வர் வேல்முருகன் கன் ஆண்டறிக்கை வாசித்தார்.தலைமை விருந்தினராக சென்னை சன்மினா எஸ்.சி.ஐ இந் தியா பிரைவேட் லிமீடெட் நிறுவன மூத்த மேலாளர் ஐசக் பட்டுராஜா, சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை எல். டி.ஐ.மைண்ட் ட்ரீ நிறுவன இணை இயக்குநர் குமாரசாமி மாணிக்கவாசகம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை பேராசிரியர்களுக்கும், சாதனை படைத்த மாண வர்களுக்கும், அரசு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு, ஐசக் பட்டுராஜா ஆகியோர் வழங்கினர். கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பொது மேலாளர்கள் கிருஷ்ணகுமார் ஜார்ஜ் கிளிங்டன் இயக்குநர்கள் ஜான்கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகா ஸத்ரி வளாக மேலாளர் பேராசிரியர் சகரியா காபிரியேல் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)
