» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

புதன் 9, ஏப்ரல் 2025 12:54:59 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் நாளினை சமத்துவ நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அன்றையதினம் அரசு விடுமுறை என்பதால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.04.2025) சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில் அனைவரும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெஃப்ரின் கிரேசியா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory