» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டென்னிஸ் விளையாட்டு பயிற்றுநர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:36:32 PM (IST)

டென்னிஸ் பயிற்றுநர் நியமனத்திற்கு தகுதியானவர்கள் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

துணை முதலமைச்சர் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் SDAT STAR - ( SPORTS TALENT ADVANCEMENT & RECOGNITION) ஸ்டார் அகாடமி வெவ்வெறு விளையாட்டுக்களுடன் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் அமைத்திட அறிவிக்கப்பட்டதின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஸடார் அகாடமி டென்னிஸ் விளையாட்டு மே 1 2025 முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

டென்னிஸ் பயிற்றுநர் : இந்த ஸ்டார் அகாடமி டென்னிஸ் பயிற்சி மையத்திற்கு டென்னிஸ் பயிற்றுநர் நியமனம் செய்யப்படவுள்ளதால் பயிற்றுநர் நியமனத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்றுநருக்கான மாத ஊதியம் ரூ.25,000/-

பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் அண்ணா விளையாட்டரங்கத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் பெற்றிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. பயிற்றுநர் பணிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20.4.2025 மாலை 5.45 மணி வரை.

பயிற்றுருக்கான தகுதிகள் :M.Sc. Sports coaching issued by National Institute of Sports (NIS) Sports Authority of India (or) One year Diploma /Certificate in sports coaching of not less than 10 months. 2.License Course conducted by International Sports Federation and 6 weeks certificate coaches course conducted by Netaji Subhas Institute of Sports at Patiala.
 
டென்னிஸ் விளையாட்டு மையம் மாணவர் /மாணவியர்கள் சேர்க்கை : இத்திட்டத்தின் கீழ் 20 மாணவர்கள் 20 மாணவியர்கள் மொத்தம் 40 பேர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள். 12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இப்பயிற்சி மையத்தின் கீழ் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் - டென்னிஸ் விளையாட்டில் பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் - டென்னிஸ் விளையாட்டிற்கு தேர்வு நாள் : 28.4.2025 காலை 7.00 மணியளவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும். தகுதியின் அடிப்படையில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள். இப்பயிற்சி மையத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவ /மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ,காலை சிற்றுண்டி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory