» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது

சனி 12, ஏப்ரல் 2025 5:10:46 PM (IST)

தென்காசி அருகே கடத்தல் வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை பணகுடியைச் சேர்ந்த விவசாயி மணி என்பவரது மகன் செல்வகுமார். இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற செல்வ குமார், கடையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தெரிவித்துள்ளார்.

லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பால்குதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory