» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் சுகுமார் தகவல்

சனி 12, ஏப்ரல் 2025 5:27:19 PM (IST)

2024-25ம் ஆண்டு மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளலிவான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு 2024-25ம் ஆண்டு செயல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து மணிமேகலை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பின்வருவாறு வரவேற்கப்படுகிறது.

கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சேர்ந்த குழுக்கள் இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், மாநகராட்சி பகுதியை சார்ந்த குழுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலும் 30.04.2025 பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு 9444094357 என்ற எண்ணிலும், திருநெல்வேலி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தினையும் (மகளிர் திட்டம்) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory