» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கும்பிகுளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்

புதன் 16, ஏப்ரல் 2025 12:19:10 PM (IST)

கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு ஏப்.23ம் தேதி சீலாத்திக்குளம் –கிராம சேவை மைய கட்டிடத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாம் 22.05.2025 அன்று நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்னோடியாக 23.04.2025 அன்று கும்பிகுளம் கிராமம், சீலாத்திக்குளம்-கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. 

மேற்படி முகாமில் சார் ஆட்சியர், சேரன்மகாதேவி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும். முகாம் நிறைவுற்றவுடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மேற்படி ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், கேட்டுக் கொண்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory