» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் 8 வட்டங்களில் ஜமாபந்தி: அம்பாசமுத்திரத்தில் ஆட்சியர் பங்கேற்பு

வியாழன் 15, மே 2025 5:04:54 PM (IST)



அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பெற்றுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. இன்று (15.05.2025) அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வருவாய் தீர்வாயத்தில் கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கப்பட்டு வரும் கணக்குகள், பட்டா மாறுதல் பதிவேடுகள், நஞ்சை புஞ்சை அடங்கல் பதிவேடு, பொறம்போக்கு பதிவேடு, நிலத்திருவை வசூல் பதிவேடு, கனிமவள பதிவேடு, மக்கள் தொகை மற்றும் கால்நடை பதிவேடு, புள்ளியல் பதிவேடு, மழை அளவு பதிவேடு, ஆக்கிரமிப்பு பதிவேடு போன்ற 24 கிராம கணக்குகள் பராமரிக்கப்பட்டு முறையாக கையாளப்படுகிறதா என்றும், கணக்குகள் பதிவேற்றங்கள் முறையாக மேற்கொள்ளப் பட்டுள்ளது குறித்து மாவட்ட அளவிலான தணிக்கை குழுவினர் உசூர் ஆய்வு( Huzur check) செய்து உறுதி செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு கிராம நிர்வாக கணக்குகளுக்கான தீர்வை மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, தெற்கு பாப்பான்குளம் 11 நபர்களுக்கும், மன்னார்கோவில் பகுதியினை 1 நபர் என 12 நபர்களுக்கு பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் நீண்டகாலமாக குடியிருப்பவர்களுக்கு வரன்முறை பட்டா வழங்கப்படும் என அறிவித்ததைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வரன்முறை பட்டா வழங்குவது தொடர்பான பணிகளை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரும், நிலஅளவை அலுவலர் கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்கள்.

மேலும், இன்றையதினம் அம்பாசமுத்திரம் வட்டம், சிங்கம்பட்டி குறுவட்டத்திற்கும், மானூர் வட்டம், மானூர் குறுவட்டத்திற்கும், நாங்குநேரி வட்டம் களக்காடு மற்றும் ஏர்வாடி குறுவட்டத்திற்கும், திருநெல்வேலி வட்டம் மதவக்குறிச்சி, நாரணம்மாள்புரம் குறுவட்டத்திற்கும், பாளையங்கோட்டை வட்டம் மேலப்பாட்டம் குறுவட்டத்திற்கும், சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் குறுவட்டத்திற்கும், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் மற்றும் திசையன்விளை குறுவட்டத்திற்கும், இராதாபுரம் வட்டம் பழவூர் குறுவட்டத்திற்கும் நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

தொடர்ந்து, 16.05.2025 அன்று மூன்றாம் நாளாக அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் குறுவட்டத்திற்கும், மானூர் வட்டம், மானூர் மற்றும் வன்னிக்கோனேந்தல் குறுவட்டத்திற்கும், நாங்குநேரி வட்டம் ஏர்வாடி குறுவட்டத்திற்கும், திருநெல்வேலி வட்டம் நாரணம்மாள்புரம் குறுவட்டத்திற்கும், பாளையங்கோட்டை வட்டம் முன்னீர்பள்ளம் குறுவட்டத்திற்கும், சேரன்மகாதேவி வட்டம் முக்கூடல் குறுவட்டத்திற்கும், திசையன்விளை வட்டம் திசையன்விளை குறுவட்டத்திற்கும், இராதாபுரம் வட்டம் பணகுடி குறுவட்டத்திற்கும் என வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் வழங்கி தங்களது கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , பொதுமேலாளர் (தாட்கோ) சுதா , வட்டாட்சியர்கள் வைகுண்டம் (அம்பாசமுத்திரம்), வெங்கட்ராமன் (இலங்கை அகதிகள்), பகவதிபெருமாள் (நில-எடுப்பு), வெங்கடாஜலம் (நில-எடுப்பு) உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory