» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்தாம் வகுப்பு தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி!

வெள்ளி 16, மே 2025 3:32:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 93.42% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், வாழ்த்து, மாணவர்கள் கல்வி ஆலோசனை பெறுவதற்கு உயர்கல்வி வழிகாட்டி மையத்தினை அணுகலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்றது. பொதுத் தேர்விற்கான முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2025-ல் மொத்தம் 285 பள்ளிகளில் 22,533 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 21,216 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10,038 மாணவிகளும் 91.85% சதவீதமும், 11,178 மாணவர்கள் 96.33 % சதவீதமும் என மொத்தம் 94.16% மாணவ, மாணவியர்கள் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.27 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் 2025-ல் மொத்தம் 188 பள்ளிகளில் 20,025 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,020 மாணவர்கள் 89.68% சதவீதமும், 10,688 மாணவியர்கள் 96.44 % சதவீதமும் என மொத்தம் 18,708 மாணவ. மாணவியர்கள் 93.42 % சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் 56 அரசு மேல்நிலை பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மையம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 ஆகிய எண்களை தொடர்புக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory