» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் நலச்சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாலக்காடு - தூத்துக்குடி வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கடந்த வாரம் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி இரவு 11:15 மணிக்கு கல்லிடைக்குறிச்சிக்கு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏராளமான பயணிகளும் பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர்.
விழாவுக்கு சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம், அம்பை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ, பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிப் பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பெரிய பள்ளி ஜமாஅத் தலைவர் அப்துல் மஜீத், பாஜக ஒன்றிய தலைவர் இசக்கி முத்து, நகர திமுக ஹனிபா, ஜார்ஜ், அதிமுக நகர செயலாளர் முத்துகிருஷ்ணன், தென்காசி மாவட்ட பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா, கல்லிடை ரயில் சங்கத்தின் சீதாராமன், அப்துல் சமது, ஜான் பால் விக்கிள்ஸ்வொர்த், ஜவஹர் மனோகர், மோகன், ஷரீஃப், ஒளி மாலிக், ரசாக், ஷாகித் மைதீன், அனீஸ் பாத்திமா,தானிஷ், நாலாயிர முத்து, கார்த்திக், சுரேஷ், ஆஸாத், சேரை சுல்தான் பீர் காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜான் ஞானராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)


