» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தனியார் நிறுவனத்தில் 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 171 வழக்குகளில் மொத்தம் 754 கிலோ 333 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தடய அறிவியல் துறை சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், கஞ்சாவை தீயிலிட்டு அழித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
