» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஈரான் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி சபாநாயகரிடம் மனு!
சனி 21, ஜூன் 2025 8:04:28 PM (IST)

ஈரான் போர் பிரச்சினையால் ஈரான் நாட்டின் அருகில் மீன்பிடித்தொழில் செய்யும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மீனவர்களை தொடர்பு கொள்வது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், ஆகியோரை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.06.2025) ஈரான் நாட்டின் அருகில் மீன்பிடித்தொழில் செய்யும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மீனவர்களை ஈரான் போர் பிரச்சினையால் தொடர்புகொள்ள முடியாததால், அவர்களை தொடர்புக்கொள்வது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், ஆகியோரை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து ஈரான் நாட்டின் அருகிலுள்ள தீவுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரான் போர் பிரச்சினையால் அங்கு பணி செய்யும் தமிழக மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளது. உவரி பகுதியை சேர்ந்த 36-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டின் அருகில் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர் இன்று என்னையும், மாவட்ட ஆட்சியர் அவர்களையும் சந்தித்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பலர் அங்கு இருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிஸ் தீவில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க அயலக நலவாரியத்தினர் முயற்சி எடுத்துவருகின்றனர். மேலும், இராதாபுரம், திசையன்விளை வட்டாச்சியர்கள் மூலம் ஈரான் கடற்கரை பகுதிகளில் சிக்கி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
முதல்வரின் தனிச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மூலம் ஆன்லைன் மூலம் ஈரானில் இருப்பவர்கள் குறித்த தகவலை பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரான் பகுதியில் போர் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தாயகம் அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உள்ளார் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் துபாய் மீரான் மற்றும் மீனவ பிரதிதிநிகள் உடன் இருந்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)
