» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:39:02 PM (IST)
திருநெல்வேலியில் வருகிற 13ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் 13.10.2025 அன்று, காலை 10.00 மணி முதல் 4.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
மேற்காணும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் ஐடிஐ பயின்று தேர்ச்சிப்பெற்ற பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளலாம். இதில் மத்திய/மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞர்கள் / இளம்பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10ம்/12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் தொழிற் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுநர்களை தேர்வு செய்யும் பொருட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது பங்கேற்பினை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0462-2342432 / 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)

தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:10:28 AM (IST)

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
திங்கள் 13, அக்டோபர் 2025 8:46:05 AM (IST)

தீபாவளி புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்: கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:21:42 AM (IST)
