» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!

புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

கூடங்குளம் கட்டிட ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை-பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (30). கட்டிட ஒப்பந்ததாரரான இவரிடம், நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி (34) என்பவர் தன்னை உதவிகலெக்டர் என்று கூறியதுடன் வடக்கன்குளத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை மண்டல அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். தொடர்ந்து அவர்கள், தன்னிடம் 17 பவுன் நகை, ரூ.8½ லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறி பிரவீன் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனு அளித்தார்.

எஸ்பி உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி சத்யா தேவி மற்றும் 22-ந்தேதி செல்லத்துரை என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி சம்பவத்தின் போது பயன்படுத்திய ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory