» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி: மற்றொருவர் படுகாயம்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 11:06:44 AM (IST)

தூத்துக்குடியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் அஜித்குமார் (22), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு, அஜித்குமார் ஸ்பிக் நகரில் உள்ள ஒரு கடையில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருச்செந்தூர் சாலையில் அவர் திரும்பியபோது, எதிரே வந்த மற்றொரு பைக் அஜித்குமாரின் பைக் மீது பலமாக மோதியது. இந்த மோதலில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு பைக்கில் வந்த முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தனபால் (45) என்பவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

S. CHANDRAKUMARFeb 9, 2026 - 10:35:18 PM | Posted IP 172.7*****

1) Electronic Automatic Traffic Signal with a Traffic Constable to be Posted at Athimarapatti Road Junction 2) Wrong Entry of Cyclists, Motor-Cyclists, Scooter Riders on the right side of the road to be banned and imposed fine by strict supervision of a Traffic Constable for 3 to 4 months initially, until it becomes normalised and regularised as customary practice. by public. 3) Strict Adgerence to laws by imposing severe fine and seizing the vehicle too. too.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory