» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் வந்த வேகத்தில் மறைந்துவிடும். வரும் தேர்தலில் வானவில்லும் (தவெக), சூரியனும் (திமுக), காணாமல் போகும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் தலைமையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய கடம்பூர் செ. ராஜூ தெரிவித்ததாவது: மழைக்காலத்தில் தோன்றி மறையும் வானவில் போல தமிழக வெற்றி கழகமும் வந்த வேகத்தில் மறைந்துவிடும். வரும் தேர்தலில் சூரியனும் (திமுக), வானவில்லும் (தவெக) காணாமல் போகும். 2026 தேர்தல் களம் அதிமுகவின் வெற்றியை நோக்கியே நகர்கிறது.
இன்று திமுகவைத் தீய சக்தி என்றும், அரசியல் எதிரி என்றும் கூறும் விஜய், கடந்த தேர்தலின் போது எந்த நிற சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அன்றைக்கு திமுக அரசியல் எதிரியாகத் தெரியவில்லையா? நேரத்திற்கு நேரம் கொள்கையை மாற்றுபவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது.
தவெக-வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் நடனமாடியதன் மூலம், 'நான் மீண்டும் டான்ஸ் தான் ஆடுவேன்' என்பதை மறைமுகமாகச் சொல்லியுள்ளார். வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதூரில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் மதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளரைப் படுதோல்வி அடையச் செய்வோம். சாதாரணத் தொண்டனை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, விளாத்திகுளத்தை மீண்டும் அதிமுகவின் எஃகுக்கோட்டையாக மாற்றுவோம்," என அதிமுக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், என்.கே. பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)


JAY FANSFeb 9, 2026 - 04:13:23 PM | Posted IP 162.1*****