» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
என்டிபிஎல் சாம்பல் கழிவுகளால் கடல் வளம் பாதிப்பு : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:40:27 PM (IST)

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் கடல் வளம் அழிவதைத் தடுக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், 46-வது வார்டு வட்ட செயலாளருமான பி.ஜே. புல்டன் ஜெசின் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தூத்துக்குடியில் அமைந்துள்ள என்டிபிஎல் அனல் மின் நிலையம், என்.எல்.சி (என்எல்சி) மற்றும் டான்ஜெட்கோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 1000 மெகாவாட் திறன் கொண்டதாக 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் நேரடியாகக் கடலில் கலக்கப்படுவதால், கடல்வாழ் உயிரினங்களும் மீன்களும் செத்து மிதக்கின்றன. கடற்கரையோரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரம் வரை சாம்பல் கழிவுகள் மிதக்கின்றன. கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவ சமுதாயம் இந்த சாம்பல் கழிவுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பாதித்த மீனவர்கள், தற்போது ரூ.500 சம்பாதிப்பதே பெரும் கடினமாக உள்ளது என மனுதாரர் வேதனை தெரிவித்துள்ளார். கடல் வளம் மற்றும் மீனவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)


SakthiFeb 10, 2026 - 03:52:17 PM | Posted IP 162.1*****